புதுடெல்லி (16 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை குண்டர்கள் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி அமைதியாக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் பயங்கரவாத குண்டர்கள் புகுந்து மாணவர்களை பயங்கரமாக தாக்கினர். மேலும் ஜாமியா மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு, காவல்துறையினரும், இந்துத்வா கும்பலும் கூட்டுச் சேர்ந்து மாணவர்களை கண்மூடித் தனமாக தாக்கி, பல்கலைக்கழகத்தில் இருந்த வகுப்பறை, நூலகம், கழிவறை என ஒன்றையும் விட்டுவைக்காமல் அடித்து துவம்சம் செய்தனர். இந்தச் சம்பவம், டெல்லி மட்டுமல்லாமல் இந்தியாவையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
देखिए कैसे दिल्ली पुलिस पढ़ने वाले छात्रों को अंधाधुंध पीट रही है। एक लड़का किताब दिखा रहा है लेकिन पुलिस वाला लाठियां चलाए जा रहा है।
गृह मंत्री और दिल्ली पुलिस के अधिकारियों ने झूठ बोला कि उन्होंने लाइब्रेरी में घुस कर किसी को नहीं पीटा।..1/2 pic.twitter.com/vusHAGyWLh
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 16, 2020
இதுமட்டுமல்லாமல், தொடர்ந்து போராடிய மாணவர்கள் மீது போலிஸார் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர். இதனால் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றனர்.
https://twitter.com/imMAK02/status/1206209369265672193
டிசம்பர் மாதம் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நூலகங்கள், வகுப்பறைகளில் நுழைந்த பயங்கரவாத கும்பல் அமைதியாக படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை பயங்கரமாக தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.