கோவை (04 ஏப் 2021): அரசியலுக்கு இடையூறு ஏற்பட்டால் சினிமாவிலிருந்து விலகிவிடுவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கோவை தொகுதி மக்கள் தெளிவான எண்ணத்தோடு இருக்கிறார்கள். குறிப்பாக இங்குள்ள ஏழை மக்களிடம் தங்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு அதிகமாக இருக்கிறது. நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை அரசியலுக்கு செலவிட விரும்புகிறேன்.
அதே நேரத்தில் அரசியலுக்கு, சினிமா இடையூறாக இருந்தால் அந்த சினிமாவையே நான் விட்டுவிடுவேன். எம்.எல்.ஏ. என்ற பட்டத்துடன் எம்.ஜி.ஆர். நிறைய படங்களில் நடித்தார். அதே போல நானும் நடிப்பேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு புதிய படங்களில் நடிக்கலாமா என பிறகு முடிவு எடுப்பேன். அரசியலில் சில மிரட்டல்கள் வந்தன.” என்றார்.