கட்சி நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் கண்டிப்பு!

Share this News:

சென்னை (03 ஜூன் 2020): கொரானா நோய் தொற்றோடு வாழப் பழகச் சொல்லி மத்திய, மாநில அரசுகள் தங்களின் பொறுப்புகளை தட்டிக் கழித்து வரும் வேளையில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களின் உடல்நலத்திலும், பாதுகாப்பிற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அதிக முக்கியத்துவம் அளித்து மிகுந்த கவனம் செலுத்திட வேண்டும் என கமல்ஹாசன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தலைவரின் கண்டிப்பான அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக, தமிழகத்திலேயே முன்னோடியாக மக்கள் அதிகம் வருகை தரும் இடங்களில் காலால் இயக்கும் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரங்களை முற்றிலும் இலவசமாக பொறுத்தும் பணிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் திருமதி. பிரியதர்சினி உதயபானு அவர்கள் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் நேற்று முன்தினம் முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

(01.06.2020) மாலையில் வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெல்லீஸ், அயனாவரம், வில்லிவாக்கம் பகுதிகளில் தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் திரு. சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலாளர் திருமதி. பிரியதர்சினி உதயபானு அவர்களின் முன்னிலையில் நகரச் செயலாளர் திருமதி. எஸ்.தமிழ்ச்செல்வி, வட்டச் செயலாளர்கள் திரு. ஜிம்.கே.மாடசாமி, திரு. விஸ்வநாதன் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் திரு. பி.டி.குப்புசாமி, திரு. வி.சரவணன், திரு. பி.ஜெகன், திரு. எஸ்.வெஸ்லி, திரு. சி.சாமுவேல் ஆகியோரது ஏற்பாட்டில் காலால் இயக்கும் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் பொறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்டச் செயலாளர் திரு. கிஷோர் சுப்பிரமணியம், நகரச் செயலாளர் திரு. கிஷோர் வின்சென்ட், திரு. வி.மோசஸ், வட்டச் செயலாளர்கள் திரு. ஹரிதாஸ், திருமதி. மோகனசுந்தரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேடவாக்கம் டேங்க் சாலை, கெல்லீஸ் பகுதியில் உள்ள “பால்ராஜ் பல்பொருள் அங்காடி” உரிமையாளர் திரு. மகேஷ் அவர்கள் காலால் இயக்கும் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் பொறுத்தும் பணிக்கு இடம் தந்து ஒத்துழைப்பு அளித்து வரவேற்றார்.


Share this News: