இரண்டு வைரஸ்களையும் வெல்வோம் – மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளுக்கு பிரபல இயக்குநர் எதிர்ப்பு!

Share this News:

சென்னை (05 ஏப் 2020): பிரதமர் மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நிராகரித்துள்ள இயக்குநர் கரு.பழனியப்பன், இரண்டு வைரஸ்களையும் அறிவியல் துணை கொண்டு வெல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு விளக்கு அல்லது மெழுகுவா்த்தியை ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமையன்று விடியோ செய்தி மூலமாக அழைப்பு விடுத்தாா்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இயக்குநர் கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு. மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நான் நிராகரிக்கிறேன் ! நீங்க..? இரண்டு வைரஸ்களையும் அறிவியல் மற்றும் அறிவின் துணை கொண்டு வெல்வோம்’ என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply