பாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்!

Share this News:

கேளம்பாக்கம் (27 அக் 2020): நான் பாஜக சார்பில் போராட வரவில்லை என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை எதிர்த்து போராட்டம் நடத்திய குஷ்பூ இன்று காலை கைது செய்யப்பட்டார் பின்பு மாலை விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலைக்குப் பின்னர் கேளம்பாக்கத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; “தேர்தல் சமயத்தில் மட்டுமே சிலர் கோவில்களுக்கு செல்கின்றனர். பெண்களைப் பற்றி இழிவாக பேசியதால், திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தினோம். கடலூர் வரை போக வாய்ப்பு கொடுப்பார்கள் என நினைத்தோம். தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துள்ளது.

இது கட்சி ரீதியிலான போராட்டம் அல்ல. ஒரு பெண் என்ற ரீதியில் போராட வந்துள்ளேன். கொள்கைகளை வீட்டில் இருந்து துவங்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் கலவரம் உண்டாக்கப்படும் என்பதாலேயே காவல்துறை காலையில் எங்களை கைது செய்தது. பெண்களை மதிக்குமிடத்தில் கடவுள் இருப்பார், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு, வீட்டிலுள்ள ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மனு கூறுகிறது.

மனுதர்மத்தில் பெண்களைப் பற்றி உயர்வாக பேசியுள்ள பகுதிகள் திருமாவளவனுக்கு தெரியவில்லை. 3700 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட மனு நூலில் இருந்து 2 வரிகள் சொல்லிவிட்டு திருமாவளவன் என்ன செய்யப்போகிறார்? மனுதர்ம நூலில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றது – அதை ஏன் சொல்லவில்லை?” எனவும் கேள்வி எழுப்பினார்.


Share this News:

Leave a Reply