அமைச்சரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட எல் முருகன்!

Share this News:

சென்னை (06 ஜூலை 2021): தடுப்பூசிகள் விவரத்தை வெள்ளை அறிக்கையாக கேட்ட எல் முருகனுக்கு வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பிரதமர் மோடியை சந்தித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எல்,முருகன், “தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பாக கோரிக்கை வைத்தோம். அதற்கு பிரதமர், தடுப்பூசி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் முன்கூட்டியே தடுப்பூசியும் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக அனைத்துத் தரவுகளும் உள்ளன. மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் ஒதுக்கீட்டில் தமிழகம் வீணடிப்பதைத் தரவுகளோடு விளம்பரப்படுத்துங்கள் எனப் பிரதமர் எங்களிடம் அறிவுறுத்தினார்” என்றார்.

மேலும் , மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை மாநில அரசு எவ்வளவு பயன்படுத்தியது மற்றும் வீணடித்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிக்கையில், தடுப்பூசியை பொறுத்தவரை மொத்தம் 35 கோடி பேருக்கு போடப்பட்டதாக மத்திய அரசு சொல்லிக்கொண்டிருக்கிறது.தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை பெறப்பட்ட தடுப்பூசிகளின் அளவு 1கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 550 ஆகும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கடந்த 21ம் தேதியில் இருந்து இந்தியாவில் தயாராகிற ஒட்டுமொத்த தடுப்பூசிகளின் அளவில் 75 சதவீதத்தை அவர்களே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு பிரித்து விநியோகம் செய்வோம் என்று சொன்னார்கள். அந்த வகையில் ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் வயிலாகவும், நேரடியாகவும் சென்று தடுப்பூசி கூடுதலாக வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். திமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை குழுவின் தலைவர் டிஆர் பாலுவிடமும் மத்திய அமைச்சரவை சந்தித்து தடுப்பூசிக்காக கோரிக்கை வைக்க சொன்னார்கள். என்னையும் டெல்லிக்கு சென்று தடுப்பூசிக்காக கோரிக்கை வைக்க சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 9ம் தேதி டெல்லிக்கு சென்று தடுப்பூசிக்காகவும் எய்ம்ஸ் மருத்துவனை தொடர்பாகவும் நான் வலியுறுத்த உள்ளேன்.

தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவிக்கிறேன். இதற்கு மேலும் தேவை என்றால் வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன் என்றார்.


Share this News:

Leave a Reply