சென்னை(17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டக்களத்தில் நடைபெற்ற திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரக் கோரியும், தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது.
குறிப்பாக சென்னையில் வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்காக மாறியுள்ளது. இங்கு அனைவரும் வியக்கும் வகையில் ஒரு திருமணம் நடைபெற்றது.
நிக்காஹ் முடிந்த நிலையில் மணமக்கள் கையில் இந்திய அரசியல் சாசன சட்டத்தை வைத்துக்கொண்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.