மாட்டி‌‌‌றை‌‌ச்சி விற்கக்கூடாது என உத்தரவிட்ட வட்டாட்சியர் – விசாரணையில் இறங்கிய அமைச்சர்!

Share this News:

திருப்பூர் (மாட்டி‌‌‌றை‌‌ச்சி விற்கக்கூடாது என வட்டாட்சியர் எச்சரித்தது குறித்து விசாரணை நடத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மாட்டு இறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவரை அம்மாவட்ட வட்டாட்சியர் அழைத்து பேசியுள்ளார்.

துளுக்கமுதுர் அருகே உள்ள கானாங்குளம் பகுதியில் மாட்டிறைச்சிக் கடைகளை நடத்தி வரும் வேலுசாமி என்பவரை அவிநாசி வட்டாட்சியர் சுப்ரமணி, இனி மாட்டு இறைச்சி விற்க கூடாது என கூறி எச்சரித்து உள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் வேலுசாமி மற்றும் அங்கிருந்தவர்கள், மாட்டிறைச்சி விற்கக் கூடாது என சட்டம் உள்ளதா ? என்று வட்டாட்சியரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெரும் விமர்சனத்திற்குள்ளான நிலையில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவிநாசி வட்டாட்சியர் சுப்ரமணி, சாலை ஓரங்களில் மாட்டு இறைச்சி கடைகள் சுகாதாரமின்றி நடந்து வருவதாக நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன.

அத்துடன் சாலை ஓரத்திலேயே மாடுகளை வெட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது, இதன் பெயரிலேயே அங்கு ஆய்வு நடத்தி எச்சரிக்கை விடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

எனினும், மாட்டிறைச்சித் தடையை அரசு உயர் அதிகாரியே பிறப்பித்தது தமிழகத்தை மெல்ல இன்னொரு உ.பி ஆக்கும் முயற்சியா என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *