காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!
சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர்களும் அக்கட்சியில் இருந்து விலகினர். அவர்களும் அதிமுகவுக்கு மாறினர். தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தாலும், அக்கட்சியில் இருந்து பலர் மொத்தமாக ராஜினாமா செய்திருப்பது பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜக செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர்…