பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

Share this News:

சென்னை (30 செப் 2020): பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை வரவேற்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , “அதிமுகவில் பிரிவு என்பதே இருக்காது. கட்சி வளர்ச்சிக்காக நிர்வாகிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி உரிய நேரத்தில் அறிவிக்கும்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பை வரவேற்கிறேன். தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Share this News:

Leave a Reply