சிகிச்சை செய்வதாகக் கூறி நண்பனின் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது!

Share this News:

ஆம்பூர் (11 மார்ச் 2022): நண்பனின் மனைவிக்கு மாந்திரீகம் மூலம் சிகிச்சை அளிப்பதாகக் கூறி நண்பனின் மனைவியிடம் அத்துமீறியவர் கைது செய்யப்படுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பி கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் சல்மான். இவர் காலனி தொழிற்சாலையில் பணி செய்துவருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சல்மானின் மனைவிக்கு கடந்த சில தினங்களாக உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் சல்மானின் நெருங்கிய நண்பரான துத்திபட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஷபிக் என்பவரை மாந்திரீகம் மற்றும் பிரார்த்தனை செய்வதற்காக சல்மான் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை சல்மான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரது வீட்டுக்குச் சென்ற ஷபிக் சல்மானின் மனைவியிடம் மாந்திரீக பூஜை செய்வதாகக் கூறி தகாத முறையில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது சல்மானின் மனைவி மஹபூப் கூச்சலிட்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து நடந்த சம்பவத்தை கணவருக்கு தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஷபிக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து வாணியம்பாடி கிளைச் சிறையில் அடைத்தனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *