உத்திர பிரதேசத்தில் 36 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி!

Share this News:

லக்னோ (11 மார்ச் 2022): 2017 இல் நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 24 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2022 தேர்தலில் 36 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வெற்றி பெற்ற சில முக்கிய முஸ்லிம் எம்.எல்.ஏக்களில் அசம் கான், அவரது மகன் அப்துல்லா ஆசம் கான் ஆகியோர் அடங்குவர்.

19% முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற உறுப்பினர்களில் 8.93% சிறுபான்மை சமூகத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ஆவர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசம் கான், ராம்பூரில் 1,21,755 வாக்குகள் பெற்று , பாஜகவின் ஆகாஷ் சக்சேனாவை எதிர்த்து 56,368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சுவாரில் (ராம்பூர்) அசம் கான் மகன் அப்துல்லா, பிஜேபி கூட்டணியில் இருக்கும் அப்னா தளத்தைச் சேர்ந்த ஹைதர் அலி கான் என்கிற ஹம்சா மியானை விட 65,059 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றார்.

முக்தார் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி, எஸ்பி சார்பில் போட்டியிட்டு பாஜகவின் அசோக் குமார் சிங்கை 38,227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

முகமதாபாத்தில் (காஜிபூர்) முன்னாள் எம்எல்ஏ சிப்கதுல்லா அன்சாரியின் மகனும் முக்தாரின் மருமகனுமான சுஹைப் அன்சாரி, பாஜக எம்எல்ஏ அல்கா ராயை எதிர்த்து 18,199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கைரானாவில், சமாஜ்வாதி கட்சியின் நஹித் ஹசன், பாஜகவின் மிருகங்கா சிங்குக்கு எதிராக 1,05,148 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல நிஜாமாபாத்தில் (அஸம்கர்) சமாஜவாதியின் 85 வயதான ஆலம் பாடி பாஜகவுக்கு எதிராக மீண்டும் போட்டியிட்டு 34,187 வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

(மீரட்) தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் ஷாகித் மசூர் 2,180 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சத்வீர் சிங்கை தோற்கடித்தார்.

சமாஜ்வாதி கட்சியின் 85 வயதான மூத்த தலைவர் ஆலம் பாடி நிஜாமாபாத் (அசம்கர்) தொகுதியில் பாஜகவின் மனோஜை எதிர்த்து 45,648 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

குந்தர்கியில் (மொராதாபாத்) சபிய எம்பி ஷபிகுர் ரஹ்மான் பார்க்கின் மகன் ஜியா உர் ரஹ்மான் பாஜக வேட்பாளர் கமல் குமாரை 43,162 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


Share this News:

Leave a Reply