துரைமுருகன், கிஷோர்,மதனை தொடர்ந்து அடுத்து சிக்கும் யுடூபர்!

Share this News:

சென்னை 914 ஜூன் 2021): துரைமுருகன், கிஷோர்,மதன் ஆகிய சமூக வலைதள பிரபலங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது சமூக வலைதள யூசர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சமூக ஊடக தளங்கள் மக்களின் அரசியல் கொள்கையையும், அன்றாட வாழ்க்கையையும் மாற்ற கூடிய சக்தி கொண்ட ஊடகமாக மாறிவிட்டது. அதன் ஒரு பகுதியாக சமீபத்திய வரவான கிளப் ஹவுசில் நடக்கும் விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் ஆதரவாளரும் யுடூப்பருமான சாட்டை துரைமுருகன் திருச்சியில் வினோத் என்ற கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக சாட்டை துரைமுருகன் உட்பட சிலர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் சாட்டை துரைமுருகன் மீது மிரட்டல் புகார் தவிர மேலும் சில வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த தவறாக பேசும் வகையில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ திமுகவினர் மட்டுமின்றி மற்ற சில கட்சியினர் இடையிலும் கடும் எதிர்ப்பை சந்தித்து இருந்தது. அதோடு தொடர்ந்து திமுகவினரை கொஞ்சம் தரைகுறைவாகவும், பொய்யான செய்திகளை அவதூறாகவும் இவர் பரப்பி வந்தார். இவருக்கு எதிராக பல முறை போலீசில் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை அடுத்து சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு வாரமாக சர்ச்சையாக்குள்ளாகி வரும் கேமர் மதன் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்க உள்ளது.பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக பேசியதாகவும், யூ டியூப் கேமில் பெண்களிடம் மோசமாக பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட யூடியூப் கேமர் மதனுக்கு போலீஸ் வலை விரித்துள்ளது. புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீஸ் முன் மதன் ஆஜராக வேண்டும் என்று போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

இது போக கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் தொடர்ந்து திமுக தலைவர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், சில சினிமா துறையினர், பெண் பத்திரிகையாளர்கள் என்று பலரை தவறாக பேசி வந்தார்.

இவருக்கு எதிராக பெண் பத்திரிகையாளர்கள் பலர், பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து இவர் நடவடிக்கைக்கு அஞ்சாமல் யூ டியூபில் வீடியோ போட்டு வந்தார். அவதூறுகளையும், அரசியல் தலைவர்களுக்கு எதிராக பாலியல் ரீதியான கருத்துகளையும் தொடர்ந்து இவர் வெளியிட்டு வந்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் மேலும் சிலருக்கும் போலீஸ் குறி வைத்துள்ளதாக தெரிகிறது.


Share this News:

Leave a Reply