எப்பா தமிழகத்தில் இறைச்சி விலை கிலோ இவ்வளவா?

Share this News:

சென்னை (05 ஏப் 2020): தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப் பட்டுள்ளதால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகள் வரத்து குறைந்துள்ளடு. இதனால் இறைச்சிகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆடு இறைச்சியின் விலை கிலோ ரூ 1200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. மாநகராட்சியின் இறைச்சிக் கூடங்களில் இருந்து வரும் இறைச்சிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அனைத்து கடைகளும் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். அவை மூன்று மாதங்களுக்கு திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று சென்னை மாநகராட்சி நேற்று அறிவித்தது.

இதனையொட்டி அந்தந்த பகுதிகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சென்று சமூக இடைவெளிகள் சரியாக கடைபிடிக்க படுகிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் இந்த உத்தரவு பொருத்தும்.


Share this News:

Leave a Reply