நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது!

Share this News:

புதுக்கோட்டை (13 டிச 2021): குன்னூர் ஹெலிகாப்டர் குறித்து அவதூறாக பதிவிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவத்தில், முக்கிய தலைவர்களை விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பிபின் ராவத் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளரான விராலிமலையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்ததாகக் கூறியுள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் பாலசுப்பிரமணியன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை அதிரடியாக கைது செய்தனர்.


Share this News:

Leave a Reply