கள்ளக்குறிச்சி கலவரம் – பரபரப்பு பின்னணி!

Share this News:

கள்ளக்குறிச்சி (17 ஜூலை 2022):

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதியின் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், பிரேத பரிசேததனை அறிக்கையில், மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுவருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போரீசார் மீது கற்களை வீசி தாக்கிய போராட்டக்காரர்கள், பேரிகார்டுகளை உடைத்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். போலீஸ் வாகனம் தீவைக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனினும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதுபோல் சென்று, மீண்டும் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்துகின்றனர். கல்வீச்சு சம்பவத்தில் காவல்துறை தரப்பில் பலர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.


Share this News:

Leave a Reply