சென்னை (01 மார்ச் 2022): தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.
பிப்ரவரி 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.
நாளை காலை 9.30மணி முதல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்கின்றனர். சேர்மன், துணை சேர்மன், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறுகிறது.