சென்னை (18 மார்ச் 2020): தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா பாதித்த நபர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா பாதித்த இளைஞர் 20 வயதுடையவர். அவர் ரயில் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளார். அந்த இளைஞர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றும், பொதுமக்கள் தேவையில்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் கரோனா அறிகுறி மற்றும் கரோனா பாதித்தவருடன் இருந்தவர்கள் என்று 2,984 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்