தேனி (23 ஜன 2020): துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பியின் ஆவின் தலைவர் பதவியை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆவினை நிர்வகிக்க, தலைவராக துணை முதல்வர் ஓபிஎஸ்.,சின் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டார். மேலும், துணை தலைவராக செல்லமுத்து மற்றும் 15 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து அம்மாவாசி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையைல் மனு அளித்திருந்தார். அதில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி, நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.. இதனை விசாரித்த நீதிபதிகள், ஓ.ராஜா தலைமையிலான நிர்வாகக்குழு செயல்பட இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டனர்.
தடையை விலக்கக் கோரி, ஆவின் நிர்வாகம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று (ஜன.,23) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரரான ஓ.ராஜா உள்ளிட்ட 17 பேரின் நியமனம் விதிகளின்படி இல்லை. எனவே, 17 பேரின் நியமனமும் ரத்து செய்யப்படுகிறது, என உத்தரவிட்டது.