தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு – எடப்பாடி வீட்டில் ஆலோசனை!

Share this News:

சென்னை (24 ஜூன் 2922) : ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர். ஓ. பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை 11ல் நடக்கவுள்ள பொதுக்குழு குறித்து எடப்பாடி பழனிசாமி வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி, பா.வளர்மதி, கே.பி.அன்பழகன், பொள்ளாச்சி ஜெயராமன், வைகைச்செல்வன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நேற்று (ஜூன் 23) நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இப்பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். இதற்கிடையே ஓபிஎஸ்.,சை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் சந்தித்தனர்.

இந்த நிலையில் டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூட்டியதற்கு எதிராக அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். ‛


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *