ஜித்தா(24 ஜூன் 2022): இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம் தயாரித்த ஹாஜிகளின் அஜீசிய்யா பகுதி வரைபடம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து புனிதப் பயணித்திற்காக வரும் ஹாஜிகளுக்கான தன்னார்வச் சேவையில் கடந்த பல தசாப்தங்களாக ஈடுபட்டு வரும் “இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம்” இவ்வருடமும் தனது தன்னார்வ சேவைக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஃபோரம் தயாரித்த ஹாஜிகள் தங்குமிடத்திற்கான அஜீசிய்யா பகுதி வரைபடத்தை வெளியிட்டனர்.
இந்திய ஹாஜிகளை வரவேற்பதற்கான நிகழ்வில் இந்திய துணைத் தூதர் முஹம்மது ஷாஹித் ஆலம், ஹஜ் துணை தூதர் ஒய். ஸாபிர், மக்கா ஹஜ் மிஷன் பொறுப்பாளர் பிலால் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம் தயாரித்த ஹாஜிகள் தங்குமிடத்திற்கான அஜீசிய்யா பகுதி வரைபடத்தை இந்திய ஹஜ் துணைத் தூதர் ஒய். ஸாபிர் அவர்கள் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஃபோரத்தின் ஹஜ் ஒருங்கிணைப்பாளர் கலீல் செம்பயில் (கேரளா), துணை ஒருங்கிணைப்பாளர் சேக் ஜமால் (தமிழ்நாடு), தன்னார்வலர் தலைவர் அப்துல் கபார் கூட்டிலங்கடி (கேரளா), தன்னார்வலர் துணை தலைவர் ஷாகிர் (கர்நாடக), அஜீசியா பகுதி பொறுப்பாளர் ஃபஷல் நிரோல்பாலம் (கேரளா), மற்றும் ஊடகத்துறை பொறுப்பாளர் முஸ்தபா பள்ளிகல் (கேரளா) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த அறிக்கையை இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரத்தின் ஊடகத்துறை வெளியிட்டுள்ளது.