சென்னை (17 அக் 2022): சட்டபேரவை கூட்டத்தில் ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. அதே நேரம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டுக்கான 2வது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முன்னதாக எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயக்குமாரை அங்கீகரித்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் கடிதம் கொடுத்திருந்தார். அதேபோல ஓபிஎஸ் தரப்பிலிருந்தும் கடிதம் கொடுக்கப்பட்டது. சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எம்.எல்.ஏக்களின் இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை தகவல் வெளியானது.
இதையடுத்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம் மனோஜ் பாண்டியன் ஆகியோர் தனியார் பாதுகாவலர்களுடன் வருகை தந்தனர்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட தலைமைச்செயலகம் வரவில்லை.