சென்னை (15 ஜூன் 2021): சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் பேசும் ஆடியோ வெளியாகிவரும் நிலையில் அதிமுகவில் சசிகலாவுடன் பேசியவர்களை கட்சியை விட்டு நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
. சசிகலாஅதிமுக நிர்வாகிகளுடன் பேசி ஆடியோக்களை வெளியிட்டு எப்போது வேண்டுமானாலும் கட்சியைக் கைப்பற்றுவேன் என சொல்லாமல் சொல்லி வருகிறார். ஏற்கனவே இரட்டை தலைமையில் இருக்கும் கட்சிக்கு இது பெரிய தலைவலியை ஏற்ப்படுத்தி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்த புகழேந்தி பாமகவுக்கு எதிராக கருத்து சொல்லவும் அவரும் கட்சியிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஓபிஎஸ்சுடன் சசிகலா பேசிய ஒருமணி நேர ஆடியோ ஒன்று இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோ ஒன்று இருந்து அது வெளியானால் என்ன நடக்குமோ? என்ற பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.