சென்னை (15 மே 2021): கோவாக்சின் தடுப்பூசியை மற்ற மருந்து நிறுவனங்களும் தயாரிக்க னுமதிப்பதில் ஏன் தாமதம் என்று என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மற்ற மருந்து நிறுவனங்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்கிடுங்கள் என காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசனை கூறி 4 வாரங்களுக்குப் பின் மற்ற நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் செய்த தாமதத்தால் தவிர்க்கமுடியாத பாதிப்புக்குள்ளான மக்கள், உயிரை இழந்த மக்களுக்கு யார் பொறுப்பேற்பது? ” என்று அந்த பதிவில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.