சிலிண்டர் தொகையை காட்டிலும் கூடுதல் தொகை வசூல் – கும்பகோணம் கோட்டாட்சியரிடம் மனு!

Share this News:

கும்பகோணம் (04 ஜூன் 2020): தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகர மேலக்காவேரி பகுதி மக்கள் நலன்களுக்காக பல்வேறு துறை அலுவலர்களை சந்தித்து முறையிடப்பட்டது.

நேற்று 3.6.2020 புதன் காலை 10:00 மணியளவில் தொடங்கி, கும்பகோணத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேலக்காவேரி பகுதியில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு உருளை (சிலிண்டர்) வழங்குபவர்கள் ரசீது தொகையை காட்டிலும் கூடுதலாக சிலிண்டருக்கு பணம் வசூலிக்கும் செயலை தடுக்க கோரி மனு அளிக்கபட்டது,

அதற்கடுத்ததாக மேலக்காவேரி பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார கோரி இரண்டு தினங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி உதவி செயற்பொறியாளர் அவர்களை மராமத்து பணிகள் நடக்கும் சத்திரம் கருப்பூர் மாதா கோவில் அருகில் காவிரி ஆற்றங்கரை பிரிவு புதிய மதகு பணி நடைபெறும் பகுதிக்கே சென்று நேரில் வலியுறுத்தப்பட்டது.

அதன் பிறகு, மேலக்காவேரி பகுதியில் தெருநாய்களின் தொல்லைகள் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி உடனடியாக தெரு நாய்களை பிடிக்க கோரி நகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது மேலும் கே எம் எஸ் நகரில் குடிநீரில் கலந்து சாக்கடை நீர் வருவதையும் சரி செய்யக்கோரியும் வலியுறுத்தப்பட்டது.

பிறகு, நகரில் உள்ள சில பகுதிகளில் பொதுவெளியில் மாலை, இரவு நேரங்களில் சிலர் கூட்டமாக நின்று மது அருந்துகிற சமூக விரோத செயலை தடுக்கக் கோரியும் அவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இறுதியாக, மேலக்காவேரி பகுதிகளில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வருகை தந்து பொதுமக்களை அச்சுறுத்தும் செயலை தடுக்கக் கோரியும் குரங்குகளை பிடித்து வனப் பகுதிகளில் கொண்டு விடக் கோரியும் முத்துபிள்ளை மண்டபத்திலுள்ள வனத்துறை அதிகாரி திரு. சரவணன் அவர்களிடம் கோரிக்கை அளிக்கப்பட்டது.

மேலக்காவேரி பகுதி மக்கள் நலன்களுக்காக பல்வேறு துறைகளில் அலுவலர்கள் சந்தித்து முறையிட்டதன் அடிப்படையில் புகாரை பெற்றுக் கொண்ட அலுவலர்கள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து மக்கள் நலன்களை பாதுகாப்பதாக உறுதி கூறியுள்ளார்கள்

இந்த மக்கள் சேவை பணிகளில் காலை முதல் மதியம் வரை முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி பேணி தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மேலக்காவேரி பகுதியை சேர்ந்த “மிஸ்வா” (MISWA) சமூக சேவை தன்னார்வலர்களை பொதுமக்கள் தங்களின் மகிழ்ச்சியான நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.


Share this News: