பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு -பொதுமக்கள் அதிர்ச்சி!

Share this News:

சென்னை (23 மார்ச் 2022): பெட்ரோல், டீசல் விலை நேற்று உயர்த்தப்பட்ட நிலையில், இன்றும் மீண்டும் அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டர் தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த 137 நாட்களாக விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யட்டு வந்த பெட்ரோல், டீசல் நேற்று அதிகரித்தது. அதன்படி, சென்னையில் நேற்று ஒருலிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் அதிகரித்து நேற்று 967.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் 2ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 91 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Share this News:

Leave a Reply