சென்னை (20 மார்ச் 2020): பிளஸ் டூ பொதுத் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 20 ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வில் மாற்றம் எதுவும் வரலாம் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் திட்டமிட்ட படி நாளை(மார்ச்-20) பிளஸ் 2 பொது தேர்வுகள் நடத்தப்படும். மேலும் பொது தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.