சேலம் (02 ஜன 2020): பாமக வேட்பாளர் சுயேட்சை வேட்பாளரிடம் வெறும் நான்கு வாக்குகள் தோல்வி அடைந்துள்ளர்.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழன் காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மூன்றாவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் வேடியப்பன், பாமக வேட்பாளர் முனுசாமியை விட நான்கு வாக்குகள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளார்.