தருமபுரி (18 ஜுன் 2021): பப்ஜி விளையாட்டு ஆபாச மன்னன் மதன் தர்மபுரியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
யூ டியூபில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளின் ட்ரிக்குகளை சொல்லி தருவதாக சேனல் நடத்தி வந்தவ யூ டியூப் கேமர் மதன் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். பெண்களிடம் தவறாக பேசுதல், வீடியோ எடுத்து மிரட்டுதல், பண மோசடி, இளம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, டெலிகிராமில் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்வது என்று பல்வேறு புகார்கள் கேமர் மதன் மீது வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதன் தலைமறைவானான்.
இந்த புகாரை அடுத்து சைபர் கிரைம் போலீசார் மதனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று அவரை நெருங்கினார்கள். நேற்று மதனின் அப்பா மற்றும் அவரின் சகோதரர் சம்பத் ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். மதனின் நண்பர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். இதில் மதன் தர்மபுரிக்கு சென்று இருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.
தருமபுரியில் இருக்கும் இன்பார்மர்கள் மூலம் மதன் எங்கே இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு இருக்கும் உறவினர் வீட்டு ஒன்றில் மதன் தலைமறைவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த சென்னை சைபர் கிரைம் போலீஸ் மதனை தருமபுரியில் வைத்து கைது செய்தது. இன்றே இவர் சென்னை கொண்டு வரப்பட உள்ளான்.
முன்னதாக பப்ஜி மதன் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில், யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதை கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி முன்ஜாமீன் வழக்கில் மதன் சார்பாக ஆஜரான வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது..