முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் அடைக்கலம்!

Share this News:

சென்னை (09 ஆக 2021); கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. சிவகாசி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

மேலும், திமுகவை தரக்குறைவாகவும் பாஜகவின் அமைச்சர் போன்றே மோடியை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து பேசிவந்த அவர், தேர்தல் முடிவுக்குப் பின்னர் மிக அமைதியானார்.

தான் முன்னர் பேசியதற்கு கூட வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அவர், அங்கேயே தங்கியுள்ளார். இதற்கிடையே, அவர் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக இதுவரை யாரும் எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.

ல் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது அவர் ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவர் மீது வழக்கு பாயலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அவர் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share this News:

Leave a Reply