சென்னை (29 ஜூலை 2020): திப்பு சுல்த்தான் குறித்த பாடங்களை பாட புத்தகத்திலிருந்து நீக்கிவிடலாம் உங்கள் மூளையிலிருந்து நீக்கிவிட முடியுமா? என்று நடிகர் ராஜ்கிரண் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் ஏழாம் வகுப்பு பாடபுத்தகத்திலிருந்து தீரன் திப்பு சுல்த்தான் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ராஜ்கிரணும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
“திப்பு சுல்தானை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கிவிடலாம்… இந்திய சரித்திரத்திலிருந்து நீக்கிவிட முடியுமா…? அவ்வளவு ஏன், உங்கள் மூளைக்குள் இருந்தாவது அவரை நீக்கிவிட முடியுமா…? எதை மறக்கடிக்க வேண்டுமென்று நினைக்கிறோமோ, அதை நம்மாலேயே, மறக்கவே முடியாது என்பது தான் மனோதத்துவம்…” என்று தெரிவித்துள்ளார்.