கரூர் (18 மார்ச் 2020): கரூர் எம்.ஆர்.வி டிரஸ்ட் மற்றும் கொங்கு ஆம்புலன்ஸ் இணைந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவ கொங்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலையடுத்து ஆங்காங்கே பொதுமக்கள் பெருமளவில் அச்சத்திற்குள்ளாகியுள்ள நிலையில். இந்தியாவில் ஒரு சில இடங்களிலும், ஒரு சில மாநிலங்களிலும் பரவிவரும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரிக்கின்றது.
இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் எல்லாம் விடுமுறை அளிக்கப்பட்டும், கல்லூரிகளிம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கரூர் மாவட்டம் முழுவதும் உஷார் நிலை தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே பாதுகாப்பு எச்சரிக்கையும் மேற்கொள்ளப்பட்டு கிருமி நாஷினிகளும் தெளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கரூர் கொங்கு ஆம்புலன்ஸ் மற்றும் எம்.ஆர்.வி டிரஸ்ட் ஆகியவைகள் இணைந்து பொதுமக்களுக்கு உதவியாக 24 மணி நேரமும் இலவசமாக இயங்கும் வகையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையென்றால் அது முற்றிலும் இலவசம் என்கின்ற முறையில் 10 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஆம்புலன்ஸ்கள் தேவை என்றால், பொதுமக்கள் கொங்கு ஆம்புலன்ஸ் 9894036188 என்கின்ற எண்ணிற்கும், 9842736188 என்கின்ற எண்ணிற்கும் அழைக்கவும் என்று கொங்கு ஆம்புலன்ஸ் நிர்வாகி லயன்ஸ் D.சரவணன் மற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.