சென்னை (30 மே 2021): சசிகலா அதிமுகவிற்கு மீண்டும் பொறுப்பேற்கலாம் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சிறை தண்டனை பெற்று 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் சிறையிலிருந்து வெளிவந்த நிலையில், அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அவர் கடந்த மார்ச் 3 ஆம் தேதி அறிவித்தது அவரது தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் ”கட்சியை சரிசெய்து விடலாம். சீக்கிரம் வந்து விடுவேன், நீங்கள் உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள்” என தொண்டர் ஒருவருடன் சசிகலா பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ தற்போது மீண்டும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.