பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது – அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

Share this News:

ஈரோடு (24 மே 2020): பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இதனை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றார்.

மேலும் பிளஸ் டூ தேர்வு விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்கள் மறுத்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர் மாவட்ட பள்ளிகளின் விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்படும். என்றும் அவர் தெரிவித்தார்.


Share this News: