சென்னை (30 ஏப் 2021): இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில்,
மே ஒன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுமதி வழங்கியது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு நேற்று முன்தினம் (28.04.2021) தொடங்கிய நிலையில், ஏராளமானோர் தடுப்பூசிக்கு செலுத்திக்கொள்ள தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொண்டனர்.
இந்தநிலையில், தடுப்பூசி தட்டுப்பாட்டால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.