தீபாவளி திருநாளையொட்டி ரேஷன் கார்டு உள்ளவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சிறப்புப் பரிசு!

Share this News:

சென்னை (13 அக் 2020): இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் மாதக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளதால், தீபாவளி பண்டிகையை அவர்கள் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு இந்த ரொக்கப் பரிசை வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அத்துடன், கொரோனாவை காரணங்காட்டி பொங்கல் பண்டிக்கைக்கும் 1,000 ரூபாய் பதிலாக கூடுதல் தொகை அளிப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply