மீண்டும் கும்பல் கும்பலாக தமிழகத்திற்கு அகதிகளாக வரும் இலங்கையர்கள்!

Share this News:

சென்னை (24 மார்ச் 2022): இலங்கையில் விடுதலைப்புலிகள் உடனான போரின் போது, தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்ததைப் போல, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார நெருக்கடி காரணங்களால், தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.

மன்னார் பகுதியில் இருந்து கைக்குழந்தையுடன் 6 பேர் தனுஷ்கோடிக்கு வந்த நிலையில், வவுனியா பகுதியிலிருந்து மேலும் 10 பேர் வந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கைக்கு அருகாமையில் உள்ள ராமேஸ்வரம் அடுத்த, மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கையில் இருந்து வரும் அகதிகளை தங்க வைப்பதற்காக தற்காலிக வீடுகள் தயார் நிலைப்படுத்த அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஏற்கனவே மண்டோ முகாமில் அகதிகளாக வந்தவர்கள் தங்கியிருந்து, தங்கள் தாய் நாடான இலங்கைக்கு சென்ற நிலையில், அவர்கள் தங்கிச் சென்ற காலியாக கிடக்கும் வீடுகளை சுத்தம் செய்து, அதனையும் தயார்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply