சென்னை (19 அக் 2020): தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற பின், நேற்று மாலை 6.05 மணிக்கு சிலுவம்பாளையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். இரவு 9.20 மணிக்கு அவர் சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப்பொதுசெயலாளர் பொன்முடியும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
ஏற்கனவே போனில் ஆறுதல் கூறிய நிலையில் நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.