சென்னை (01 ஜூலை 2020): சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘எடப்பாடி பழனிசாமி நீங்கள், நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதுமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது. இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்?
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.