சென்னை (22 ஜூன் 2021): 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த அவர், ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் ஜூலையில் நடக்கும் பட்ஜெட் தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும். என்று தெரிவித்தார்.
மேலும் ஆளுநர் உரை யாற்றிய கூட்டத்தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்படவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.