நான் சொன்ன ஒன்றையும் கேட்கவில்லை – எடப்பாடி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Share this News:

சென்னை (28 ஜூன் 2020): கொரோனா பரவலை தடுக்க நான் கூறிய எந்த ஆலோசனைகளையும் முதல்வர் எடப்பாடி கேட்கவேயில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று ஸ்டாலின் தெரிவித்ததாவது:

கொரோனாவை தடுக்க தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தந்துள்ளேன். ஏராளமான மருத்துவர்கள் சொன்ன ஆலோசனைகளையும் சொன்னேன். இவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்கிறது என முதல்வர் அலட்சியமாக இருக்கிறார். கொரோனாவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

கொரோனா சமூக பரவலாக இல்லை என்ற வார்த்தை விளையாட்டாக மக்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார் முதல்வர். தமிழகத்தில் கொரோனாவினால் ஏற்படும் ஒட்டுமொத்த பேரழிவிற்கு காரணம் முதல்வர்தான். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.


Share this News: