சென்னை (16 ஜூலை 2020):தமிழகத்தில் நோட்டாவைத் தாண்டுவதைக் கூட பா.ஜ.க. மறந்துவிடலாம் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக புதனன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இராணுவ உடையில் திருக்குறளை மேற்கோள் காட்டும் பிரதமர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ‘இராணுவத்தில் தமிழர்கள் பங்கு’ என்ற பாடத்தை நீக்குகிறார். வெறும் பேச்சு மட்டும்தானா?
தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி.,யின் எல்லைப் போராட்டம் ஆகிய பாடங்களை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க மறுத்தால் தமிழ் மண்ணில் நோட்டாவைத் தாண்டுவதைக் கூட பா.ஜ.க. மறந்துவிடலாம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.