அத்தியாவசிய பொருட்களுக்கு கூட அனுமதி இல்லை – கோவையில் அதிரடி!

Share this News:

கோவை (14 ஏப் 2020): கோவையில் அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடத்தில் முதலில் சென்னையும் அடுத்து கோவையும் இருக்கிறது. இதனால் கோவையில் உள்ள 14 முக்கிய இடங்களை மாவட்ட நிர்வாகம் முழுவதுமாக முடக்கியுள்ளது.

அதில், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, மேட்டுப்பாளையம், மேட்டுக்கடை, சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், மீன் மார்க்கெட், ஆர்.எஸ் புரம், கே.கே புதூர், கவுண்டம்பாளையம் மற்றும் சேரன்மாநகர் ஆகிய இடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு மாவட்ட நிர்வாகம் தலைமையிலான அணிகளால் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வீட்டு வாசலில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பிற பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவது உள்ளிட்ட எல்லா நேரங்களிலும் முகமூடி அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply