சென்னை (10 மார்ச் 2020): கொரோனா பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக எஸ்வி சேகர் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார்.
கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. தமிழகத்திலும் சிலருக்கு அந்த பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா வைரஸ் மோடிக்கு ஆதரவாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரானா, மோடிக்கு ஆதரவாக செயல்படுகிறது_எதிர்க்கட்சிகள் ஆவேசம். CAA எதிர்ப்பு போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டது… கச்சா எண்ணெய் பீப்பாய் 33 டாலர்க்கு வந்து விட்டது…” என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறியுள்ளார்.
எஸ்.வி.சேகரின் இந்த கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.