நாங்க மூன்றாவது இடம் தெரியுமா? – சங்கு பங்கு என அலட்டிய ராஜேந்தர்!

Share this News:

சென்னை (05 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சேகரிக்காமலேயே ஒரு இடத்தில் மூன்றாவது இடம் பிடித்தோம் என்று என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

டி.ராஜேந்தர் இன்று சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் வென்று தலைவராகியுள்ள நிலையில் அவர் சந்தித்தார்.

அப்போது அவரிடம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு,

‘’உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது மக்கள் சிந்தித்து தான் முடிவெடுக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. யார் பணம் கொடுத்தாலு வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால், தங்களுக்கு விருப்பமானவர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த முடிவுகள் அதிமுகவுக்கு ஒரு அபாய சங்கு; அதனால்தான் நான் ஏற்கவில்லை பங்கு’’ என்று அடுக்குமொழி பேசியவரிடம்,

லட்சிய திமுக ஏன் இத்தேர்தலில் போட்டியிடவில்லை? என்ற கேள்விக்கு, ‘’ரஜினி, கமலே யோசிக்கும்போது நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி யோசித்துதான் முடிவெடுக்க வேண்டும். என் கட்சி தொண்டர்களும் இத்தேர்தலில் போட்டியிட விரும்பினார்கள். அவர்களிடம், ‘நான் ஓட்டு கேட்டு வர முடியாது’என்று சொல்லிவிட்டேன். அப்படியிருந்தும் அவர்களாகவே போட்டியிட்டார்கள். என் கட்சியை சேர்ந்த ஒருவர் இத்தேர்தலில் போட்டியிட்டு பணம் கொடுக்காமலேயே 3வது இடம் வந்திருக்கிறார்’’என்றார் ராஜேந்தர்.


Share this News:

Leave a Reply