முன்னாள் அதிமுக அமைச்சருடன் கள்ள உறவு – பிரபல தமிழ் நடிகை பரபரப்பு புகார்!

Share this News:

சென்னை (28 மே 2021): முன்னள் அமைச்சருடன் கள்ள உறவில் இருந்ததாகவும், மூன்று முறை கருகலைப்பு செய்ததாகவும் தமிழ் நடிகை ஷாந்தினி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் மணிகண்டன் தன்னை காதலிப்பதாக கூறி 5 வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும், கருவுற்ற தன்னை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே தன்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் சாந்தினி. மேலும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply