இளம்பெண்ணிடம் வீடியோ காலில் அந்தரங்க பாகத்தைக் காட்டிய கோயில் குருக்களை, அவரது கணவர் லெஃப்ட் ரைட் வாங்கும் வீடியோ காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கோயில் குருக்கள் ஒருவர் முகம் தெரியாத இளம்பெண்ணுக்குத் தவறான நோக்கத்துடன் வீடியோ கால் செய்துள்ளார்.
ஆனால் விபரம் தெரியாமல் அந்த பெண் அந்த குருக்களின் காலை எடுத்துள்ளார். அந்த சமயம் அந்த பெண்ணிடம் தகாத முறையில் வீடியோ காலில் செயல்பட்டுள்ளார் அந்த குருக்கள். அதுமட்டுமல்லாமல் ஆபாச படங்களையும் அந்த பெண்ணின் வாட்சப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இந்த சம்பவம் குறித்து தன்னுடைய கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் கணவர் தன் நண்பர்களுடன் கோயில் குருக்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளார்.
அதன்பிறகு, அந்தக் கோயில் குருக்களை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து, அவர் செய்த தவற்றை அவர் வாயாலேயே வரவழைத்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.