சென்னை(01 டிச 2022): விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மணிமாறன் மீது விசிக தலைவர் திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டம்(தெற்கு) இலத்தூர் வடக்குஒன்றியச் செயலாளர் திரு.மணிமாறன் அவர்கள் கட்சியின் நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மூன்றுமாத காலத்திற்கு அப்பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டம்(தெற்கு) இலத்தூர் வடக்குஒன்றியச் செயலாளர் திரு.மணிமாறன் அவர்கள் கட்சியின் நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மூன்றுமாத காலத்திற்கு அப்பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார் pic.twitter.com/YdqD2n2dtb
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 1, 2022