நாகை (12 ஜூலை 2021): பாஜக தலைமையால் எல்.முருகன் அவமதிக்கப்பட்டுள்ளார் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் அலுவலகம் திறப்பு, சிதம்பரம் அடுத்த புவனகிரியில் டாக்டர் அம்ப்தேகர் கைத்தறி பட்டு சொசைட்டி திறப்பு, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் அலுவலக திறப்பு ஆகியவற்றில் பங்கேற்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.
இந்நிலையில் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பாஜக தலைவராக இருந்த எல். முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு என்றுதான் கருதுகிறேன்.
தமிழகத்தில் நாலு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது முருகனை பலிகடா ஆக்கி விட்டு அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அமைச்சர் பதவியை வழங்கி இருக்கிறார்கள். முருகன் கையில் இருந்த அதிகாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.