திருவை (16 ஜூன் 2020): ஹெல்ப்குரூப்திருவை சார்பில் பரளியாறு, வாழயத்து வயல், கீரிப்பாறை, பால்குளம் போன்ற பகுதிகளில் வாழும் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களின் 355 குடும்பங்களுக்கு ரூபாய் 2,48,500(இரண்டு லட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து ஐந்நூறு) மதிப்பிலான மளிகை பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது
மேலும் மலைவாழ் கிராமங்கள் புறத்தி மலை , வெள்ளருக்கு மலை, வட்டப்பாறை, போன்ற கிராமங்களுக்கு 90 குடும்பங்களுக்கு ரூபாய் 63,000/-செலவில் மளிகை பொருட்கள் அடங்கிய kit வழங்கப்பட்டது.மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.
இதற்கு உறுதுணையாக இருந்த மலைவாழ் மக்கள் நலச்சங்கம் மாவட்ட செயலாளர் திரு.ரெகு, இயற்கை பறவை ஆர்வலர் திரு.சிபு, தொடங்கிவைத்த கடயல் வனசரகர் திரு.ரஞ்சித் மேலும் கடையாலு மூடு திரு.மாகீன் சுலைமான், டாக்டர். ஸ்ரீமதிகேசன் ஆகியோருக்கும் இதற்கு பொருள் உதவி வழங்கிய SKI STAR FOUNDATION க்கும் ஹெல்ப்குரூப் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.